Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிடலாம் - மதுரை ஐகோர்ட்

லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிடலாம் - மதுரை ஐகோர்ட்

லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

👤 Sivasankaran25 Feb 2019 3:22 PM GMT
லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிடலாம் - மதுரை ஐகோர்ட்
Share Post

மின்வாரியத்தில் உதவி பொறியாளர் நியமனத்திற்கான எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானது. இது தொடர்பாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த பழனிபாரதி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கோபமுற்றதுடன், காட்டமான கருத்துக்களையும் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது :

" லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கென கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை முடக்க வேண்டும். கடுமையான சட்டம் வந்தால்தான் லஞ்சம் வாங்குவது இயல்பான விஷயம் என்பது மாறும். தேச துரோக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிடலாம். அப்போது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.