Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » வழிபாட்டுத்தலங்களில் நோயை உண்டாக்கும் பிரசாதம் விநியோகம்- உணவுப் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை
வழிபாட்டுத்தலங்களில் நோயை உண்டாக்கும் பிரசாதம் விநியோகம்- உணவுப் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை
வழிபாட்டுத் தலங்களில் பிரசாதம் என்ற பெயரில் நோயை உண்டு உணவுப் பொருட்கள் விநியோகத்தைத் தவிர்க்கும் வழிமுறை பற்றி உணவுப் பாதுகாப்பு ஆணையம் புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.
👤 Saravana Rajendran6 Feb 2018 4:32 AM GMT

நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் கடவுள் நம்பிக்கை கொண்டு செல்பவர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் குஜராத் சோம்நாத் கோவில் அதிகாரிகள் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் சிறப்பு பயிற்சியில் பங்கெடுத்து விதிகளை தெரிந்து கொள்ள உள்ளனர். வழிபாட்டுத் தலங்களில் வழிபட வருவோருக்கு வழங்கப்படும் பிரசாதம் பாதுகாப்பானவை என்பதை உறுதிசெய்யும் கடமை அந்தந்த மாநில அரசுகளுக்கு இருப்பதாக உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. .நாள்தோறும் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டு ஆலயங்களில் சுமார் 300 கோடி மக்கள் கடவுள் தரிசனம் செய்து செல்கின்றனர்.
.இவ்வாறு கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது குருத்வாராக்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். அதே போன்று உணவு பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஜனவரி 29ம் தேதி உணவு பாதுகாப்பு ஆணைய தலைமை செயல் இயக்குனர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளித்துள்ள கடிதத்தில் பிரசாதங்களின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் பயிற்சியில் வழிபாட்டு தலங்களின் சார்பில் அதிகாரிகள் பங்கேற்று சுகாதாரமான முறையில் பிரசாத தயாரிப்பை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலைச் சேர்ந்தவர்கள் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல கோவில்களில் திருவிழா மற்றும் இதர சிறப்பு வழிபாட்டு நாட்களில் பிரசாதம் என்ற பெயரில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த உணவுப் பொருட்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் உடல் உபாதைகள் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகி அதை உண்பவர்கள் நீண்டகால நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
முக்கியமாக நவராத்திரி என்ற பெயரில் இந்தியா முழுவதும் 9 நாட்கள் விழா நடத்தப் படுகிறது, அப்போது நாடு முழுவதும் உள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்களில் பெரும் எண்ணிக்கையில் இனிப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது, இந்த இனிப்புகள் மாவா எனப்படும் பால் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது,இந்த காலகட்டத்தில் இந்த மாவாக்கள் அபாயகரமாக வேதிப்பொருட்களுடன் கலந்து தயாரிப்பதாக ஆண்டுதோறும் வரும் புகார்களை அடுத்து இணிப்பு தயாரிக்கும் நிறுவனங்களில் நடக்கும் சோதனைகளில் டன் கணக்கில் வேதிப்பொருள் கலக்கப்பட்ட மாவாக்கள் பறிமுதல் செய்யப்படும், அதே போல் திருப்பதி கோவிலில் கொடுக்கும் லட்டுவில் தேவையில்லாத பல பொருட்கள் கலந்திருப்பதை நியூஸ் 24 என்ற சேனல் நேரடியாக பல முறை ஒளிபரப்பியுள்ளது,
2016-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள கோவில் ஒன்றில் விழா நடந்தது, அந்த விழாவில் கோவில் தரப்பில் கொடுப்பட்ட உணவு தரமாற்றதாக இருந்த காரணத்தால் அதை சாப்பிட்ட 600 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இது போன்ற சூழல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது, ஆகவே இதைக் கட்டுப்படுத்த சுகாதாரமாக உணவுகளை தயாரியுங்கள் என்று உணவுப் பாதுகாப்பு ஆணையம் கோவில்களை வலியுறுத்தி வருகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire