Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » அன்று கீழடி, இன்று ஆதிச்சநல்லூர்-தமிழரின் தொன்மையை மூடி மறைக்கும் பாஜக அரசு

அன்று கீழடி, இன்று ஆதிச்சநல்லூர்-தமிழரின் தொன்மையை மூடி மறைக்கும் பாஜக அரசு

திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வராய்ச்சி செய்யும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

👤 Saravana Rajendran21 Feb 2018 12:26 AM GMT
அன்று கீழடி, இன்று ஆதிச்சநல்லூர்-தமிழரின் தொன்மையை மூடி மறைக்கும் பாஜக அரசு
Share Post

நெல்லையைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நெல்லை ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும், அந்த அறிக்கையின் அடிப்படையில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் மற்றும் அங்கு மீண்டும் விரிவான ஆராய்ச்சி நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடைபெறுமா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. மேலும் இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என்றால் தொல்லியல்துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்து பதிலளித்துள்ள மத்திய தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்பில்லை. அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்வது மத்திய அரசின் கொள்கையை பொறுத்தது என்று தெரிவித்துள்ளது. மேலும் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட பொருட்கள் சென்னை அருட்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணரும் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வராய்ச்சி முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. ஆதி தமிழனின் வரலாற்று உண்மையை மறைக்கவே மத்திய அரசு இத்தகைய முடிவுகளை கையாள்வதாக தமிழ் வரலாற்று ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்