Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » எங்கு நோக்கினும் செங்கொடி-மும்பையின் ஓட்டத்தை நிறுத்திய விவசாயிகள்

எங்கு நோக்கினும் செங்கொடி-மும்பையின் ஓட்டத்தை நிறுத்திய விவசாயிகள்

விவசாய கடன் தள்ளுபடி, விவசாயத்திற்கான கொள்கைவகுத்த எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துகள் உள்ளிட்ட 20-கோரிக்கைகளை வலியுறுத்தில் ஒருலட்சத்திற்கும் குறைவான விவசாயிகள் பேரணி மும்பையில் நுழைந்ததால். எங்குநோக்கினும் கம்யூனிச கொடியான செங்கொடி மயமாக காட்சியளிக்கிறது.

👤 Saravana Rajendran11 March 2018 9:54 PM GMT
Share Post

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற அனைத்து இந்திய கிசான் சபா என்ற இந்திய விவசாயிகள் அமைப்பு விவசாயிகளுக்காக போராட்டத்தை நடத்திவருகிறது. இம்முறை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மகாராஷ்டிராவின் விவசாயப் பெருநகரமான நாசிக்கில் இருந்து கடந்த புதனன்று மும்பைக்கு போராட்ட நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்..
ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவை 5 நாட்களாக நடந்த விவசாயிகள் தற்போது மும்பை மாநகரத்தின் தாதரில் உள்ள புகழ்பெற்ற சிவாஜி மைதானத்தில் திரண்டுள்ளனர்.
நாசிக் நகரில் புறப்படும்போது, 30 ஆயிரம் விவசாயிகளாக இருந்த நிலையில், மும்பைக்கு வந்தபோது,ஒருலட்சமாக உயர்ந்துவிட்டது. தற்போது மும்பை நகரமெங்கும் செங்கொடிகளுடன் பிரம்மாண்ட வரிசையில் விவசாயிகள் மும்பை நகருக்குள் சாரை சாரையாக வந்துகொண்டு இருக்கின்றனர்.
விவசாயிகள் வருகையால் மும்பை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக மும்பை காவலர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விரிவான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டம் குறித்து அனைத்து இந்திய கிசான் சபா அமைப்பின் தலைவர் அசோக் தாவ்லே கூறியதாவது:
விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வனத்துறை நிலங்களை விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஆதிவாசிகளிடம் இருந்து கைப்பற்றிய நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும், மகாராஷ்டிராவின் நீரை குஜராத் மாநிலத்துக்கு பகிர்ந்தளிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாசிக் நகரில் இருந்து மும்பைக்கு 30 ஆயிரம் விவசாயிகள் நடைபயணம் வந்துள்ளோம்.
கடந்த செவ்வாய்கிழமை பொதுக்கூட்டம் நடத்தில் புதனன்று பயணத்தை தொடங்கினோம், ஞாயிற்றுக்கிழமை மும்பையை வந்துடைந்துள்ளோம். புறப்படும்போது 30 ஆயிரமாக இருந்தது, மும்பையை அடைந்தபோது, ஒருலட்சமாக உயர்ந்துவிட்டது.
இன்று மாநிலசட்டப்பேரவை முன் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறோம். முன்னதாக மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜனைச் சந்தித்து எங்கள் கோரி்க்கைகளை தெரிவித்தோம் அவர், முதல்வர் பட்நாவிசிடம் தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.
எங்களின் போராட்டம் நாளை அமைதியான முறையில் இருக்கும். மும்பை மாநகரம் எங்களின் போராட்டத்தால் குலுங்கப்போகிறது. எங்களின் பேரணியை காலை 11 மணிக்கு மேல் தொடங்கி மாலையில் முடிக்கிறோம் என்பதால், மாணவர்களுக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் இடையூறு இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்துக்கு சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.