Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » இந்தியாவில் அமைதியான வாழ்க்கை கிடையாது- யுனஸ்கோ பட்டியலிட்டது

இந்தியாவில் அமைதியான வாழ்க்கை கிடையாது- யுனஸ்கோ பட்டியலிட்டது

உலகில் அமைதியான வாழ்க்கை வாழும் மக்கள் குறித்த கணக்கெடுப்பில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளதாக யுனஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

👤 Saravana Rajendran15 March 2018 9:48 PM GMT
இந்தியாவில் அமைதியான வாழ்க்கை கிடையாது- யுனஸ்கோ பட்டியலிட்டது
Share Post

யுனஸ்கோ அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இதுவரை இருந்துவந்த நார்வே இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது, அதே நேரத்தில் இரண்டாமிடத்தில் இருந்துவந்த பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

மொத்தம் 156 நாடுகளில் நடந்த இந்த ஆய்வில் பின்லாந்தை தொடர்ந்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. அமெரிக்கா 18-வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு கடந்த ஆண்டு 122வது இடம் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 11 இடங்கள் பின் தங்கியுள்ளது.

மத்தியில் ஆளும் வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட ஆட்சியாளர்களின் முறையட்ட ஆட்சி, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, மாட்டிறைச்சி விவகாரம், வேலைவாய்ப்பிண்மை, விலைவாசி உயர்வு, போன்ற பல்வேறு சிக்கல்கள் நாட்டில் தினசரி அதிகரித்து வருவதால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். இதன் தாக்கம் தனிமனித வாழ்விலும் தெளிவாக தெரியவந்துள்ளது என்பதை இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது