Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மோடி குறித்த விவகாரமான காணொளி வெளியீடு - மன்னிப்பு கோரியது ஐசிசி

மோடி குறித்த விவகாரமான காணொளி வெளியீடு - மன்னிப்பு கோரியது ஐசிசி

ஐசிசியின் அதிகாரபூர்வ சமூகவலைப் பக்கத்தில், மோடி குறித்து சர்ச்சைக்குறிய காணொளிப் பதிவை வெளியான நிலையில், தவறுதலாக அது பதிவாகி விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும், ஐசிசி நிரிவாகம் தெரிவித்துள்ளது.

👤 Saravana Rajendran25 April 2018 5:11 PM GMT
மோடி குறித்த விவகாரமான காணொளி வெளியீடு - மன்னிப்பு கோரியது ஐசிசி
Share Post

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்த நிலையில், தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில், மோடியுடன் அவர் இருப்பது போன்ற விடியோவை, ஐசிசி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டது.
பலத்த கண்டனங்கள் எழுந்த நிலையில், உடனடியாக அப்பதிவு நீக்கப்பட்டது. இந்நிலையில், காணொளிக் காட்சியை ஐசிசி தவறுதலாக பதிவிட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து, ஐசிசி-யிடம் விவரம் கோரப்படும் என்றும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.