Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தாழ்த்தப்பட்ட சிறுமி என்று தெரிந்ததவும் வகுப்பறைக்கு வெளியே அமரவைக்கப்பட்ட கொடூரம்-சாமியார் ஆட்சியில் தொடரும் தீண்டாமை கொடுமை
தாழ்த்தப்பட்ட சிறுமி என்று தெரிந்ததவும் வகுப்பறைக்கு வெளியே அமரவைக்கப்பட்ட கொடூரம்-சாமியார் ஆட்சியில் தொடரும் தீண்டாமை கொடுமை
உத்தரப்பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு மாணவியின் ஜாதியைக் கேட்ட ஆசிரியர், அவர் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவி என்று தெரிந்ததும் கடைசி இருக்கையில் உட்கார வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
👤 Saravana Rajendran25 April 2018 5:21 PM GMT

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள முசாஃபர் நகரில் உள்ள கர்மா என்ற தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியின் ஜாதியை அந்த மாணவியின் வகுப்பு ஆசிரியர் கேட்டுள்ளார்.
அப்போது அந்த மாணவி தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவள் என்று கூறியுள்ளார். மாணவி தாழ்த்தப்பட்டவர் என்று தெரிந்ததும், முதல் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியை, அனைவரது முன்பும் கடைசி பெஞ்சில் போய் உட்கார் என்று கூறியுள்ளார்.
காரணமே இல்லாமல் தான் கடைசி இருக்கைக்கு அனுப்பப்பட்டதை எண்ணி நொந்த அந்த மாணவி, வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், பள்ளிக்கு வந்து சகமாணவிகளிடம் ஆசிரியரின் நடவடிக்கையை விசாரித்தனர். தன் மகள் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கடைசி இருக்கைக்கு அனுப்பிய, வகுப்பு ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire