Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தாழ்த்தப்பட்டவர்கள் என்ன காண்காட்சிப் பொருளா அவர்களின் வீட்டில் சாப்பிட்டு அவர்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்- நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரிபாய் புலே

தாழ்த்தப்பட்டவர்கள் என்ன காண்காட்சிப் பொருளா அவர்களின் வீட்டில் சாப்பிட்டு அவர்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்- நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரிபாய் புலே

தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டில் சாப்பிடுகிறோம் என்று கூறி கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவர்களை...

👤 Saravana Rajendran4 May 2018 10:04 AM GMT
தாழ்த்தப்பட்டவர்கள் என்ன காண்காட்சிப் பொருளா அவர்களின் வீட்டில் சாப்பிட்டு அவர்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்- நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரிபாய் புலே
Share Post

தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டில் சாப்பிடுகிறோம் என்று கூறி கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவர்களை அவமானப்படுத்தும் செயலை சாமியார் முதல்வர் முதல் பாஜக பிரமுகர்கள் அனைவரும் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர்.இது தாழ்த்தப்பட்டமக்களை அவமானப்படுத்தும் செயல் என்று பயிரச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரிபாய் புலே கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் உமாபாரதி "நான் தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டில் சென்று சாப்பிடுவதால் அவர்கள் புனிதமாகிவிடுவார்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதே போல் உத்திரப்பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலிகர் மாவட்ட பாஜகபிரமுகர் வீட்டிற்கு சென்று சாப்பிட அமரும் போது அவர் தாழ்த்தப்பட்டவர் என்று தெரிந்த உடன் அவரது வீட்டு உணவைச் சாப்பிட மறுத்தார். அமைச்சரும் அவருடன் வந்த இதர பாஜக பிரமுகர்களும் சாப்பிடாமல் வெளியே சென்றால் பிரச்சனையாகிவிடும் என்று தெரிந்துகொண்டு வெளியில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து உண்டனர். இதற்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் அவர்கள் வீட்டில் சாப்பாடு முடிந்துவிட்டாதால் நாங்கள் வெளியில் வாங்கிச் சாப்பிட்டோம் இதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.
உபி சாமியார் முதல்வர் ஆதித்யநாத் வட உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணத்தின் போதும் தாழ்த்தப்பட்டவீட்டில் சாப்பிடுகிறேன் என்று கூறி அவர்களது வீட்டில் சாப்பிடாமல் அவர் வெளியில் இருந்து வந்த உணவை சாப்பிட்டார். இதுதொடர்பாக அவரது உதவியாளர்களிடம் கேட்ட போது முதல்வர் மதம் தொடர்பான விரதத்தில் இருப்பதால் அவரது விரத உணவை வெளியில் இருந்து தான் வாங்கிவரமுடியும் ஆகவே முதல்வர் உணவை வெளியில் இருந்து கொண்டுவந்து சாப்பிட்டார் என்று ஒரு விளக்கத்தைக் கொடுத்தனர். இது தொடர்பாக மாயாவதி கூறும் போது தாழ்த்தப்பட்டவர் வீட்டில் சாப்பிட்டால் தீட்டாகிவிடும் என்ற தீண்டாமை மனநிலையிலேயே இவர்கள் இவ்வாறு நடந்து தாழ்த்தப்பட்டமக்களை அவமானப்படுத்துகின்றனர் என்று கூறினார்.
இந்த நிலையில் பயிரச் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சாது சாவித்திரிபாய் புலே நான்பாரா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூறியதாவது,"சில நாட்களாக தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் உணவு உண்கிறேன் என்று கூறி தொடர்ந்து அவமானப்படுத்திவருகிறார்கள். டாக்டர் பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் எப்போது யாரிடமும் பேதம் பார்த்ததில்லை. முதல்வரும் அவரது அமைச்சரவை சகாக்களும் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு காட்சிப்பொருட்களாக பார்க்கின்றனர். அவர்கள் மனிதர்கள் தானே கூண்டிற்குள் அடைக்கப்பட்ட காட்சி விலங்குகள் அல்லவே, ஏன் அவர்களை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன வசதிகள் செய்துகொடுத்திருக்கிறீர்கள், எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாங்கித்தந்திருக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்டவர்களில் நானும் ஒருவர், ஆனால் என்னை தனியாக தாழ்த்தப்பட்ட சாமியார் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அடையாளமிட்டு அழைக்கிறார்கள். ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் சாப்பிடுவதுபோல் நாடகமாடுகிறார், உடனே ஊடகங்கள் அனைத்தும் அவர் செயல் குறித்து ஏதோ பெரும்பயனான செயல் ஒன்றைச் செய்துவிட்டதாக கூறி புகழாரம் சூட்டுகிறது, உண்மையில் இது தாழ்த்தப்பட்டமக்களுக்கு கிடைத்த அவமானமாகும், இது அவர்களது தன்மானத்திற்கு கிடைத்த இழுக்கு ஆகும். எந்த ஒரு தாழ்த்தப்பட்ட மக்களும் எங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடுங்கள் என்று அழைக்கவும் இல்லை, அப்படி வந்து நாடகமாடுவதை விரும்பவுமில்லை என்று கூறினார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை முதல்வர் அவமானப்படுத்தியதால் தொடர்ந்து 3 தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதைத்தொடர்ந்து இவர் பகிரங்கமாகவே பொதுக்கூட்ட மேடையில் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.