Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மீண்டும் அமைச்சரவை மாற்றம்- தொடர் குழப்பத்தில் இலங்கை அரசாங்கம்

மீண்டும் அமைச்சரவை மாற்றம்- தொடர் குழப்பத்தில் இலங்கை அரசாங்கம்

உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக அமைச்சரவை மீண்டும் 3ஆவது...

👤 Saravana Rajendran4 May 2018 10:13 AM GMT
மீண்டும் அமைச்சரவை மாற்றம்- தொடர் குழப்பத்தில் இலங்கை அரசாங்கம்
Share Post

உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக அமைச்சரவை மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசாங்கத்தில் பிரச்சனைகளுக்குறிய நபர்களான ரவி கருணாநாயக்க மற்றும் விஜயதாஸ ராஜபகசே ஆகியோருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜயதாஸ ராஜபகசேவிற்க்கு மாத்திரமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலாதுறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவருக்கு வழங்கப்படவில்லை.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சகங்கள் இரு பிரதான கட்சியின் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்கள் விபரம்!
தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்
சமூக நலன்புரி, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக தயா கமகே நியமனம்
நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்
திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவாகரம், தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமனம்
அரச கருமமொழிகள், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசன் நியமனம்
மீள் குடியேற்றம் மற்றும்,வட மாகாண அபிவிருத்தி,இந்து விவகாரா அமைச்சராக டீ.எம்.சிவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்
மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி, கிராமிய பொருளாதார அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்சா நியமனம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, விளையாட்டுத்துறை அமைச்சராக பைசர் முஸ்தபா நியமனம்
பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரான ரஞ்ஜித் மந்துமபண்டார நியமனம்
பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிம் நியமனம்
நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக தலதா அத்துகோரல நியமனம்
சமூக வலுவூட்டல் அமைச்சராக பீ. ஹரிசன் நியமிக்கப்பட்டுள்ளார்
உள்நாட்டலுவல்கள மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி. நாவின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்ப்பாசன மற்றும் நீரியல்வள முகாமைத்துவம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திஸாநாயக்க நியமனம்
விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர நியமனம் பெற்றுள்ளார்.
விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி , திறன்விருத்தி, தொழில்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சராக சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்
இன்றைய அமைச்சரவை மாற்றத்திற்கு இணையாக, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் மாற்றம் நடைபெறும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.