Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கீழடியில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்துதான் தமிழகத்தின் வரலாற்றை மாற்றியமைக்க முடியும்

கீழடியில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்துதான் தமிழகத்தின் வரலாற்றை மாற்றியமைக்க முடியும்

முழுமையாக தோண்ட தடையாக நிற்கிறார்கள், கூறுகிறார் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்

👤 Saravana Rajendran1 Jan 2019 3:54 PM GMT
கீழடியில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்துதான் தமிழகத்தின் வரலாற்றை மாற்றியமைக்க முடியும்
Share Post

செங்கை புத்தகத் திருவிழாவில் ஞாயிறன்று (டிச.30) நடைபெற்ற கருத்தரங்கில், 'கீழடியின் வெளிச்சம்' என்றத் தலைப்பில் இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப் பாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது:-கீழடி ஆய்வை எனது தலைமையிலான இரண்டு தொல்லியல் துறை ஆய்வாளர்கள், 6 ஆராய்ச்சி மாணவர்கள் என 9 பேர் கொண்ட சிறிய குழுதான் செய்தது.

நம்மிடம் வளமையான சங்க இலக்கியம் உள்ளது. ஆனால் சங்க இலக்கியத்திற்கான தொல்லியல் ஆதா ரங்களை நாம் தேடாமல் விட்டுவிட் டோம். நம்முடைய சங்க இலக்கியத்தை என்றைக்கு ஆதாரப்பூர்வமாகப் பேசு கின்றோமோ அன்றைக்குத்தான் உல கிற்கு நம்முடைய பழமை புரியும். அந்தப் பழமையை பேசவைப்பதுதான் நம்முடைய தொல்லியல் அகழ்வாராய் வுகளின் பணி. உலகில் எந்த மனிதரும் ஆதாரம் இல்லை என்றால் எதையும் நம்பமாட்டார்கள். இந்த ஆதாரங்களைத் தேடத்தான் முழுமையான தேடலை நாங்கள் மேற்கொண்டோம்.சங்க காலம் இருந்த ஒரு நகரம் மதுரை. ஆனால் மதுரையைப் பற்றி யாரைக் கேட்டாலும் தெரியாது.

மதுரை எப்போது உருவானது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. அதன் கால அளவை பார்த்தோம் என் றால் கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்கு முன் பாக மதுரை அந்த இடத்தில் இல்லை. இதுதான் உண்மை. மீனாட்சியம்மன் கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுக்கள், அதனுடைய சிற்பங்களோ கட்டிடக் கலையோ கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான் கட்டப்பட்டவை. அதற்கு முன்னால் எந்த ஒரு ஆதாரங்களும் அங்கு கிடைக்கவில்லை.

இதை அறிவியல் பூர்வமாகக்கூட சொல்லலாம்.எங்கு மதுரை இருந்தது என யாருக்கும் தெரியாது. யாரும் ஆய்வும் செய்யவில்லை. ஆனால் மதுரைதான் சங்கம் வளர்த்த நகரம். ஆனால், அந்த நகரத்தைப் பற்றி முழு மையான ஆய்வு இன்றுவரை செய்யப் படவில்லை. மதுரையைத் தேட முடியாது. ஆனால் தொல்லியல் நகரங் களையாவது தேடலாம். அப்படித் தான் வைகை கரை முழுவதையும் எடுத்துக் கொண்டு 250 கிலோ மீட்டர் பாய்கின்ற அய்ந்து மாவட்டத்தில் இதன் இரண்டு கரைகளிலும் எட்டு கிலோ மீட்டர் தொலைவை எடுத்துக் கொண்டு ஒரு முழுமையான கள ஆய்வை மேற் கொண்டோம்.

அந்த ஆய்வில் கிட்டத்தட்ட 293 இடங்களில் பல வகையான தொல்லி யல் எச்சங்கள் கிடைத்தன.இதுவரையி லும் தமிழ்நாட்டில் நதிக்கரை நாகரீகம் பற்றி ஆய்வுகள் நடைபெறவில்லை. வடஇந்தியாவில் இதுபோன்ற ஆய்வு கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. சிந்துசமவெளி நாகரீகம் சிந்து நதி யினைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். கங்கை, யமுனை, கோதாவரி போன்ற நதிகளை முழுமை யாக ஆய்வு செய்துள்ளனர். இதில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் நதிக்கரை நாகரீகங்கள் குறித்து ஆய்வு செய்து ஆதாரங்களை ஆவணப்படுத்த எந்தவித ஆய்வுகளும் இதுவரை நடைபெறவில்லை. இந்த முயற்சியை நாங்கள் 2013--14ல் எடுத் தோம்.

வெற்றிகரமாக முடித்தோம். வைகை நதிக்கரையில் 293 இடங்களில் எச்சங்கள் கிடைத்தன. 100 மக்கள் வாழ்விடங்கள் கிடைத் தன. ஆனால் நூறு இடத்தையும் எங்களால் தோண்ட முடியாது. அத னால் ஒரு இடத்தைத் தேர்வு செய்தோம். அந்த இடம் தான் கீழடி.100 ஏக்கரை தோண்டுவது என்பது சுலபமான வேலை இல்லை. அதில் 15 விழுக்காடு தோண்டினாலே அதன் முழு விபரம் வந்துவிடும். ஆனால் ஒரு விழுக்காடு கூட முழுமையாக தோண்டவில்லை.

கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு ஏக்கர் தான் தோண்டப்பட்டுள்ளது. அந்த ஒரு ஏக்கரிலே பல விதமான கட் டிடக் கலைகள் எங்களுக்குக் கிடைத் தன. செங்கல்லால் கட்டப் பட்ட கட்ட டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங் கள் கிடைத்தன. அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் சங்க காலத்திற்கு சான்றாக இருக்கும்.கீழடியில் கிடைக்கும் ஆதாரங் களை வைத்துதான் தமிழகத்தின் வரலாற்றை மாற்றியமைக்க முடியும். சங்க காலத் தின் கால அளவு கி.மு 300 முதல் கி.பி 300 வரை என்பது எப்படிக் குறிக்கப் பட்டது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. அரிக்கன் மேட்டில் நடை பெற்ற அகழாராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்களை வைத்துதான் அந்த கால அளவு குறிக்கப்பட்டுள்ளது. அங்கு ரோமானியர்களின் நாணயங்கள் கிடைத் ததன் அடிப்படையில் தான் அந்த கால அளவு கொடுக்கப்பட்டது.

உண்மையான கால அளவு தெரிய வேண்டும் என்றால் அறிவியல் பூர்வ மாக செய்யவேண்டும்.கீழடி தொல்லி யல் மேடு என்பது நான்கரை மீட்டர் உயரம் கொண்டது. இதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இறுதியாக நான்கரை மீட்டரிலுள்ள பொருட்களை பகுப்பாய்வு செய்தால் எப்போது சங்க காலம் தோன்றியது, எப்படி வளர்ச்சி பெற்றது, எப்படி முடிவுற்றது என்பதற் கான முழு சான்றுகள் அங்குக் கிடைக் கும். இதை முழுமையாகத் தோண்டி னால் தான் கிடைக்கும் ஆனால் தோண்ட மறுக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.