Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு வந்த இளைஞர்கள் கைது

சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு வந்த இளைஞர்கள் கைது

சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு வந்த 15 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸாரினால் நேற்று (12) இரவு கைது செய்யபட்டுள்ளனர்.

👤 Sivasankaran13 Jan 2019 11:29 AM GMT
சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு வந்த இளைஞர்கள் கைது
Share Post

சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு வந்த 15 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸாரினால் நேற்று (12) இரவு கைது செய்யபட்டுள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு வருகை தந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாகவும், ஹட்டன், வட்டலை, தியகல பகுதியில் மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சா, ஹெரோயின் போன்ற போதை பொருள் வசம் இருந்தமை தொடர்பிலேயே இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யபட்ட 15 சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்தபட உள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, மாத்தறை, சேர்ந்த இளைஞர்கள் இவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றத் தடுப்பு மேற்கொண்டு வருகின்றனர்.