ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவால் ஆகிறது
ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனம், கடனை திரும்ப செலுத்த முடியாததால், திவால் நடவடிக்கையை ஏற்க முடிவு செய்து உள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனம், கடனை திரும்ப செலுத்த முடியாததால், திவால் நடவடிக்கையை ஏற்க முடிவு செய்து உள்ளது.
அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 46 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
அனில், தன் சகோதரர், அம்பானியின், 'ஆர்ஜியோ' நிறுவனத்திற்கு, அகண்ட அலைக்கற்றை உரிமத்தை விற்பனை செய்து, அதில் கிடைக்கும், 975 கோடி ரூபாயில், எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் வழங்க முயற்சி மேற்கொண்டார். ஆனால், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பழைய கடன்களுக்கு பொறுப்பேற்றால், பின்னாளில், தொலைதொடர்பு துறை கேள்வி எழுப்பும்' என கூறி, ஆர்ஜியோ பின்வாங்கி விட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம், மும்பையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வெளியிடப்பட்ட அறிக்கை: நிறுவனம், 2017, ஜூன் 2ல், சொத்துக்களை விற்பனை செய்து, குறிப்பிடத்தக்க அளவிற்கு கடன்களை திரும்பச் செலுத்த முடிவு செய்தது. இது தொடர்பாக, 18 மாதங்களாக மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை. அதனால், திவால் நடவடிக்கைக்கு உடன்படுவது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை, மும்பை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தெரிவித்து, விதிமுறைப்படி, 270 நாட்களில், கடனை திரும்பத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடன் அளித்த நிறுவனங்கள், பங்கு முதலீட்டாளர்கள் உட்பட, நிறுவனத்துடன் இணைந்துள்ள அனைத்து தரப்பினர் நலனுக்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை...