உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள தினத்தில் எந்தவித மாற்றமுமில்லை
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (ஏப்ரல், 1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்...
👤 Sivasankaran2 April 2020 2:26 PM GMT

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (ஏப்ரல், 1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பேசுகையில், "எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த பரீட்சை ஒத்திவைக்கப்படும் என ஒரு சில சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
கடந்த வருடம் (2019) இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire