Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கொரோனா வைரசால் ரஷ்யாவில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொரோனா வைரசால் ரஷ்யாவில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 106,498ஆக உள்ளது.

👤 Sivasankaran30 April 2020 3:33 PM GMT
கொரோனா வைரசால் ரஷ்யாவில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Share Post

ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.

இதன்படி இன்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 106,498ஆக உள்ளது.

இதுதவிர இன்று மட்டும் ஒரே நாளில் 7,099பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்று மட்டும் 101பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,073ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 93,806பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 11,619பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.