முககவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் உயிரிழப்பு
சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணிவதும் மட்டுமே.

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 75.79 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கொரோனா நம்மை தாக்காமல் இருக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணிவதும் மட்டுமே.
ஒஹையோவைச் சேர்ந்த ரிச்சர்டு ரோஸ் (37), இவர் ஒரு தீவிர டிரம்ப் ரசிகர். முன்னாள் ராணுவ வீரரான ரிச்சர்டு, சமூக ஊடகங்களில் கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட், என்று கூறிவந்தார்.
நான் மாஸ்க் எல்லாம் வாங்க மாட்டேன், கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று தன் முகநூலில் பதிவிட்டிருந்தார். ஜூலை 1ஆம் தேதி அன்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனையின் முடிவுகள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தன.
ஜூலை 4ஆம் திகதி ரிச்சர்டு ரோஸ் உயிரிழந்தார்.