Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சிறிலங்காவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

சிறிலங்காவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

வெகுவிரைவில் நாட்டில் மிகவும் மோசமான முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

👤 Sivasankaran21 Sep 2020 7:57 AM GMT
சிறிலங்காவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்
Share Post

சிறிலங்காவில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என சிறிலங்கா தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாத வகையில் மக்கள் நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். மக்கள் உரிய சுகாதார முறைகளுக்கு அமையச் செயல்படவில்லை என்றால் வெகுவிரைவில் நாட்டில் மிகவும் மோசமான முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான சிரமங்களுக்குள்ளாகாமல் இருப்பதற்கு மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து சிறிலங்காவிற்கு வருவோரில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.