மூதாட்டியின் ஓய்வூதியத் தொகையை திருடிய அதிகாரி
இதுபற்றி உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் நார்த்தாம்ப்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஜாக்கி ஒய்ட் (வயது 83). இவருக்கு கெவின், மார்ட்டின் என்ற 2 மகன்களும், சூசன் ஹாய்லே என்ற மகளும் உள்ளனர். ஒய்ட் ஞாபக மறதி வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற பின்னர் அதற்காக உள்ள கிராம பகுதியில் வசித்து வந்துள்ளார். ஒய்ட் வீட்டில் தவறி விழுந்து உள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆடம் புரூக்ஸ் (வயது 33), என்ற கிராம மேலாளர் ஒய்ட்டை ஆம்புலன்சில் ஏற்றியுள்ளார். ஆனால், அவரை காப்பாற்றும் பணியை மேற்கொள்ளாமல், அனுமதி இன்றி ஒய்ட்டின் அறையில் ஒய்ட்டின் ஓய்வூதியத் தொகை இருந்துள்ளது. புரூக்ஸ் அதனை திருடி கொண்டார்.
ஆனால், தனது தாயாரின் பாதுகாப்புக்காக ஒய்ட்டின் அறையில் மார்ட்டின் சி.சி.டி.வி. கேமிரா ஒன்றைப் பொருத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ந்த புரூக்ஸ் அதனை எடுத்து கொண்டு அந்த அறையில் இருந்து சென்று விட்டார்.
எனினும், ஒய்ட் சில மணிநேரங்களில் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து, தனது தாயாரின் அறையில் நடந்தவை பற்றி மார்ட்டின் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ததில் புரூக்சின் செயல்கள் தெரிய வந்தன. இதுபற்றி உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
புரூக்சிற்கு நார்த்தாம்ப்டன் நீதிமன்றம் 27 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.