Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற உலோகத்தூண் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற உலோகத்தூண் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

வெள்ளிக்கிழமை அந்த தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது.

👤 Sivasankaran1 Dec 2020 11:21 AM GMT
உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற உலோகத்தூண் ருமேனியாவில் கண்டுபிடிப்பு
Share Post

கடந்த புதனன்று, அமெரிக்காவிலுள்ள உட்டா பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், வெள்ளிக்கிழமை அந்த தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது.

ருமேனியா நாட்டில் அதே போல் ஒரு உலோக தூண் திடீரென தோன்றியுள்ளது. இந்த தூண்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடத்திலும் அமைந்துள்ளது.