உடனடியாக மூடப்பட்டது உரும்பிராய் சந்தை!
உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
👤 Sivasankaran14 Dec 2020 3:34 PM GMT

உரும்பிராய் சந்தை, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா நோயில் பீடிக்கப்பட்டவரிடம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், அவர் உரும்பிராய் பொதுச் சந்தையில் நடமாடியதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சுகாதார ஆலோசனை பெறப்பட்டு, மீளத் திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire