லண்டன் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
👤 Sivasankaran23 Dec 2020 6:43 AM GMT

நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட 266 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அவர்களின் உடலில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிவதற்காக, அந்த 5 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire