சாவகச்சேரியில் வீதியில் சென்ற ஒருவர் குத்திக் கொலை
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ்ந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் வீதியால் சென்ற மனிதரை இனம்தெரியாத ஒருவர் கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
ஐயாத்துரை மோகனதாஸ் (வயது 47) என்பவரே கத்திக்குத்திற்கு இலக்கானார். அவர் காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ்ந்துள்ளார்.
வீட்டிலிருந்து மீசாலைக்கு இருசக்கர வண்டியில் புறப்பட்ட அவரை இனந்தெரியாத ஒருவர் வழிமறித்து கையிலும் நெஞ்சுப் பகுதியிலும் கத்தியால் குத்திவிட்டு தப்பித்துள்ளார்.
குருதி வெள்ளத்தில் வீதியில் கிடந்த அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.