Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படும்

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படும்

பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமையும் என்றும் அதனை தவிர வேறு எதுவும் அமைக்கப்படாது

👤 Sivasankaran20 Jan 2021 7:51 AM GMT
யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படும்
Share Post

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது. இதற்கு எதிராக உள்நாட்டிலும் உலக அரங்கில் இருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வெளிப்படுத்தப்பட்டன.

பல்கலைக்கழக துணைவேந்தர் மீளவும் அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்து தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இத் தூபியை மீள் அமைக்கப்படுவது தொடர்பில் சில சர்ச்சைகளும் வெளிப்படுத்தப்பட்டு வந்தன.

குறிப்பாக இத் தூபியானது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அல்லாமல் பொதுவானது என்றும் சமாதானத் தூபி என்றும் பல கருத்துக்கள் பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அத்தகைய கருத்துக்கள் செய்திகளை மாணவர் ஒன்றியம் மறுத்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமையும் என்றும் அதனை தவிர வேறு எதுவும் அமைக்கப்படாது எனவும் தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.