Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தமிழரின் மத உரிமைகள் ஒடுக்கப்படவில்லை – விக்ரமநாயக்க

தமிழரின் மத உரிமைகள் ஒடுக்கப்படவில்லை – விக்ரமநாயக்க

கலாசார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது.

👤 Sivasankaran21 Jan 2021 9:16 AM GMT
தமிழரின் மத உரிமைகள் ஒடுக்கப்படவில்லை – விக்ரமநாயக்க
Share Post

குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மத மற்றும் கலாசார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது.

பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல. அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை நிறுவ தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும்.

அரசியல் நோக்கங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டைத் தோற்றுவிக்கின்றார்கள். ஆகவே, குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வுப் பணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.