Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சிறிலங்காவில் நாய்களிடம் தோன்றியுள்ள புதிய வைரஸ்!

சிறிலங்காவில் நாய்களிடம் தோன்றியுள்ள புதிய வைரஸ்!

பல இடங்களில் வளர்ப்பு நாய்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

👤 Sivasankaran23 Jan 2021 3:33 PM GMT
சிறிலங்காவில் நாய்களிடம் தோன்றியுள்ள புதிய வைரஸ்!
Share Post

சிறிலங்காவில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய வைரஸ் ஒன்று பரவுவது அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த வைரஸ் தொற்றினால் நாட்டில் பல இடங்களில் வளர்ப்பு நாய்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுளள கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர, தொடர் வயிற்றோட்டம், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் நாய்களுக்கு ஏற்பட்டு பின்னர் அவை மரணம் வரை அது தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.