Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சீன ரெயில்களை இயக்குவதைப் புறக்கணிக்க இலங்கை ரெயில் ஓட்டுநர்கள் முடிவு

சீன ரெயில்களை இயக்குவதைப் புறக்கணிக்க இலங்கை ரெயில் ஓட்டுநர்கள் முடிவு

பிரேக்குகளை அழுத்தும்போது, நிறுத்தவேண்டிய இடத்தை விட கூடுதல் தூரம் செல்கின்றன.

👤 Sivasankaran6 Feb 2021 6:57 AM GMT
சீன ரெயில்களை இயக்குவதைப் புறக்கணிக்க இலங்கை ரெயில் ஓட்டுநர்கள் முடிவு
Share Post

இலங்கையின் ரெயில் என்ஜின் ஓட்டுநர்கள் சங்க செயலாளர் இந்திகா தொடங்கொட சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சீன ரெயில் பெட்டிகளில் பிரேக்குகள் கோளாறாக உள்ளன. பிரேக்குகளை அழுத்தும்போது, நிறுத்தவேண்டிய இடத்தை விட கூடுதல் தூரம் செல்கின்றன. சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள் உள்ளூர் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய முறையாக பராமரிக்கப்படவேண்டும்.

சீனாவில் தயாரிக்கப்படும் ரெயில் வண்டிகள் குறித்து எழுப்பப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படும் வரை என்ஜின் ஓட்டுநர்கள் அந்த ரெயில் வண்டிகளை இயக்குவதை புறக்கணிப்பார்கள்." என்று அவர் தெரிவித்தார்.