சிறிலங்கா தேசிய கொடி பொறித்த தரைவிரிப்பு விவகாரம்: சீனத் தூதரகம் விளக்கம்
இது குறித்துப் பலரும் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.

அமேசான் நிறுவனம் சிறிலங்காவின் தேசியக் கொடியுடன் கூடிய கால் துடைக்கும் தரைவிரிப்பு ஒன்றை சந்தையில் வெளியிட்டுள்ளது. இது குறித்துப் பலரும் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சீனாவில் இருக்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரை உடன் தொடர்பு கொள்ளுமாறு பெய்ஜிங்கில் உள்ள சிறிலங்காத் தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்திருந்தார்.
அத்துடன், கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கும் அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சீனத் தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
"தேசிய கொடிகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இதே போன்ற தயாரிப்புகளை அமேசானில் பல்வேறு நாடுகளின் விற்பனையாளர்கள் விற்கிறார்கள்.
எவ்வாறாயினும், பல பத்தாண்டுகளாகச் சிறிலங்காவின் அமைதி, செழிப்பு மற்றும் கௌரவத்திற்காக சீனா ஆதரவளித்து வருகின்றது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.