நைஜீரியாவில் காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
பயங்கரவாதிகள் காவல் நிலையத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர்.
👤 Sivasankaran28 April 2021 3:35 PM GMT

நைஜீரியாவின் தெற்கு பகுதியில் இமோ மாகாணத்தின் தலைநகர் ஓவர்ரியில் உள்ள காவல் நிலையம் மீது நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் காவல் நிலையத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர்.
பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலில் காவல்துறையினர் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பல காவல்துறையினர் பலத்த காயமடைந்தனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire