Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலகச் சுகாதார அமைப்பு ஒப்புதல்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலகச் சுகாதார அமைப்பு ஒப்புதல்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் செயல்திறன் 79 சதவீதம் என உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

👤 Sivasankaran8 May 2021 2:33 PM GMT
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலகச் சுகாதார அமைப்பு ஒப்புதல்
Share Post

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசரக் காலப் பயன்பாட்டிற்கு உலகச் சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவில் தயாரான தடுப்பூசிக்கு முதல்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6-வது தடுப்பூசி இதுவாகும்.

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் செயல்திறன் 79 சதவீதம் என உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.