Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » அலைபேசியில் பிரபாகரனின் படம் வைத்திருந்ததற்காகக் கைதான சிறுவன், இளைஞனுக்கு பிணை!
அலைபேசியில் பிரபாகரனின் படம் வைத்திருந்ததற்காகக் கைதான சிறுவன், இளைஞனுக்கு பிணை!
14 வயது சிறுவனை கைது செய்த காவல்துறையினர் அவருடன் தங்கியிருந்த 21 வயதான மற்றுமொரு இளைஞரையும் கைது செய்தனர்.
👤 Sivasankaran24 May 2021 7:40 AM GMT

சிறுவன், வாகரை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் கற்பிட்டி- நுரைச்சோலை பிரதேசத்திலுள்ள புகையிலை உற்பத்தி செய்யும் பண்ணைக்கு தொழிலுக்காக வந்தபோது நுரைச்சோலைக் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவரின் அலைபேசியை சோதனை செய்த போது, அதில் பிரபாகரனின் புகைப்படங்கள் இருந்துள்ளன.
இதனையடுத்து 14 வயது சிறுவனை கைது செய்த காவல்துறையினர் அவருடன் தங்கியிருந்த 21 வயதான மற்றுமொரு இளைஞரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire