தடுப்பூசி போடாதவர்களின் அலைபேசி இணைப்பு துண்டிக்க முடிவு
இது முதலில் வெறும் பரிந்துரையாக மட்டுமே இருந்தது.
👤 Sivasankaran13 Jun 2021 7:17 AM GMT

பஞ்சாப் மாகாணத்தில் தடுப்பூசி போடாதவர்களின் அலைபேசி இணைப்புகளைத் துண்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது முதலில் வெறும் பரிந்துரையாக மட்டுமே இருந்தது.
மக்களின் தயக்கம் நீடிப்பதால் அதை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும், இதை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து தொலைதொடர்புத்துறை முடிவு செய்யும் எனவும் மாகாண சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாது என மாகாண அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire