Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » இருளில் மூழ்கியது தென்மராட்சி

இருளில் மூழ்கியது தென்மராட்சி

காவல்துறையின் பேருந்துக்குப் பின் பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

👤 Sivasankaran1 July 2021 2:51 PM GMT
இருளில் மூழ்கியது தென்மராட்சி
Share Post

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மீசாலைப் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் பேருந்துக்குப் பின் பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

அதனால் அருகில் இருந்த மின் கம்பம் சேதமடைந்து கொடிகாமம் , மீசாலை மற்றும் சாவகச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.