Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்து இணைந்த தந்தை

கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்து இணைந்த தந்தை

குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

👤 Sivasankaran14 July 2021 2:34 PM GMT
கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்து இணைந்த தந்தை
Share Post

1997-ம் ஆண்டு ஷாங்டாங் (Shandong) மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் (Guo Gangtang) என்பவரின் 2 வயது மகன் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது கடத்தல்காரர்கள் இருவர் அவனை கடத்தி சென்று விற்று விட்டனர்.

காவல்துறையினர் அந்த கடத்தல்காரர்களை கைது செய்த போதும் குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தனது மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்தார்.

அவரின் இந்த அயராத முயற்சிக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு கடத்தப்பட்ட தனது மகனை அவர் கண்டுபிடித்து அவனுடன் இணைந்து விட்டார்.