Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தெஹிவளையில் இரு இளைஞர்கள் கைது

தெஹிவளையில் இரு இளைஞர்கள் கைது

இரயிலில் இளைஞர்கள் இருவரும் முகக்கவசம் அணியாமல் ஏற முயன்றுள்ளனர்.

👤 Sivasankaran14 July 2021 2:37 PM GMT
தெஹிவளையில் இரு இளைஞர்கள் கைது
Share Post

கொழும்பு - தெஹிவளை இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட புகையிரத காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரயிலில் இளைஞர்கள் இருவரும் முகக்கவசம் அணியாமல் ஏற முயன்றுள்ளனர்.

முகக்கவசம் அணிந்து இரயிலில் ஏறுமாறு அறிவுறுத்திய சந்தர்ப்பத்தில் இளைஞர்கள் இரயில் நிலையக் காவலரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த காவலர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளையடுத்து, தெஹிவளையில் வசிக்கும் 20 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.