Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சிறிலங்கா முழுவதும் பரவிய டெல்டா வைரஸ்

சிறிலங்கா முழுவதும் பரவிய டெல்டா வைரஸ்

அண்மைய நாட்களில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் அதிகமானோர் டெல்டா தொற்றாளர்கள்

👤 Sivasankaran5 Aug 2021 2:10 PM GMT
சிறிலங்கா முழுவதும் பரவிய டெல்டா வைரஸ்
Share Post

சிறிலங்கா முழுதும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவியுள்ளமையால் அதிகளாவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மைய நாட்களில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் அதிகமானோர் டெல்டா தொற்றாளர்கள் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.