கிரீஸில் மிக மோசமான வெப்ப அலை
சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
👤 Sivasankaran6 Aug 2021 2:54 PM GMT

பல ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸில் இப்போது மிக மோசமான வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
இதனால் அந்நாட்டிலுள்ள பல்வேறு காட்டுப்பகுதிகளிலும் பயங்கரமான காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78 இடங்களில் காட்டுத்தீ பற்றிய புகார்களைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தக் காட்டுத்தீயில் சிக்கி குறைந்தபட்சம் எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளதுள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire