பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
உயிர்சேதம், பொருட்சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
👤 Sivasankaran12 Aug 2021 3:44 PM GMT

பிலிப்பைன்சின் தென்கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 49 மைல் தொலைவில் மையம் கொண்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire