Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மொன்றியல் நகரப் பகுதிக்குக் கொதி நீர் அறிவுறுத்தல் விடுப்பு

மொன்றியல் நகரப் பகுதிக்குக் கொதி நீர் அறிவுறுத்தல் விடுப்பு

தண்ணீரை குறைந்தது ஒரு நிமிடத்துக்காவது கொதிக்கவைத்து பிறகு பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

👤 Sivasankaran13 Aug 2021 1:52 PM GMT
மொன்றியல் நகரப் பகுதிக்குக் கொதி நீர் அறிவுறுத்தல் விடுப்பு
Share Post

மொன்றியல் நகரின் டாலார்ட்-டெஸ்-ஆர்மேக்ஸ் (Dollard-des-Ormeaux) மற்றும் பியரிஃபாண்ட்ஸ் (Pierrefonds) ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் பாக்டீரியாக்கள் இருப்பது தெரிவந்துள்ளதால், குடிப்பது, சமைப்பது, ஐஸ் தயாரிப்பது, செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர் கொடுப்பது மற்றும் பல் துலக்குவது ஆகிய விடயங்களுக்கு கொதிக்கவைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்துமாறு இந்த பகுதி மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

தண்ணீரை குறைந்தது ஒரு நிமிடத்துக்காவது கொதிக்கவைத்து பிறகு பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்றபடி குளிக்க, துணி துவைக்க இந்த தண்ணீரை அப்படியே பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான் என்று கூறியுள்ள அவர்கள், குழந்தைகளை குளிக்கவைக்கும்போது மட்டும் அவர்கள் தண்ணீரை குடித்துவிடாமல் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.