Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தடுப்பூசியை கட்டாயமாக்கிய ஒட்டாவா பல்கலைக்கழகம்

தடுப்பூசியை கட்டாயமாக்கிய ஒட்டாவா பல்கலைக்கழகம்

கொரோனா டெல்டா மாறுபாடின் தாக்கம் அதிகரித்து வருவதாலையே, தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது

👤 Sivasankaran13 Aug 2021 1:59 PM GMT
தடுப்பூசியை கட்டாயமாக்கிய ஒட்டாவா பல்கலைக்கழகம்
Share Post

ஒட்டாவா பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா டெல்டா மாறுபாடின் தாக்கம் அதிகரித்து வருவதாலையே, தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் நண்பர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.