பொது சுகாதார பரிசோதகர்கள் மீது தாக்குதல்
இந்த தாக்குதல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
👤 Sivasankaran16 Aug 2021 3:20 PM GMT

மாத்தறை - திக்வெல சுகாதார மருத்துவ அதிகாரியுடன் இணைந்திருந்த இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கோவிட் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் இறந்ததையடுத்து, வீடு ஒன்றில் வசிப்பவர்களை தனிமைப்படுத்திய போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, பொது சுகாதார அதிகாரிகளை இருவர் தாக்கியுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள், இருவரும் ஆகஸ்ட் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire