நீஹில் மாவட்டத்தில் வேளாண் பேரழிவு அறிவிக்கப்பட்டுள்ளது
சபையின் ஆகஸ்ட் 17 வழக்கமான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
👤 Sivasankaran22 Aug 2021 12:03 PM GMT

மத்திய ஆல்பர்ட்டா நகராட்சியின் சில பகுதிகளில் 100 வருட வறட்சியை விட மோசமான நிலையை விவரிக்கும் ஒரு ஊழியர் அறிக்கையைக் கேட்ட பிறகு, நீஹில் மாவட்டச் (Kneehill County) சபை உறுப்பினர்கள் வேளாண் பேரிடராக அறிவித்தனர்.
சபையின் ஆகஸ்ட் 17 வழக்கமான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பூங்காக்கள் மற்றும் விவசாய சேவைகளின் மேலாளர் ஷெல்பி ஷெர்விக்கிடமிருந்து (Shelby Sherwick ) ஒரு அறிக்கையைச் சபை உறுப்பினர்கள் கேட்டனர். இந்தக் கோடை வறட்சியின் விளைவுகள் குறித்து உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்கான ஊழியர்களின் முயற்சிகளை அவர் விவரித்தார்.
சபை உறுப்பினர்கள் ஒருமனதாக ஊழியர்களுக்கு நீஹில் மாவட்டத்தில் ஒரு வேளாண் பேரிடரை அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire