லாப நோக்கிலான நீண்ட கால பராமரிப்பு இல்ல ஊழியர்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது கட்டாயம்
முழுமையாக தடுப்பூசி போடாத எவரும் அதற்குள், ஊதியமில்லாத விடுப்பில் வைக்கப்படும்.

வியாழக்கிழமை ஒரு அறிக்கையில், சார்ட்வெல் (Chartwell), எக்ஸ்டென்டிகேர் (Extendicare) , ரெஸ்பான்சிவ் குரூப் (Responsive Group), ரெவெரா மற்றும் சியன்னா (Revera and Sienna) உள்ளிட்ட நீண்டகால பராமரிப்பு மற்றும் ஓய்வூதிய வீட்டு ஆபரேட்டர்களின் கூட்டணி, அக்டோபர் 12 க்குள் ஊழியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தது. முழுமையாக தடுப்பூசி போடாத எவரும் அதற்குள், ஊதியமில்லாத விடுப்பில் வைக்கப்படும்.
"இது சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சரியான விஷயம். தடுப்பூசி போடுவதே எங்களையும், நாம் நேசிப்பவர்களையும், நமது சமூகங்களையும் பாதுகாப்பதற்கான மிகப்பெரிய படியாகும், "என்கிறார் எக்ஸ்டெண்டிகேர் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் மேத்யூ மோர்கன் (Matthew Morgan).
ஒட்டாவா நகரத்தால் நடத்தப்படும் ஐந்து நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் உட்பட பல இலாப நோக்கற்ற வீடுகள், தடுப்பூசி போடப்படாத ஊழியர்களை தொடர்ந்து சோதித்து, தடுப்பூசிகளில் கல்வி அமர்வுகளை மேற்கொள்ளும் வரை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன. இது ஒன்ராறியோ அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தரமாகும்.