Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஒன்ராறியோ கோல்ஃப் மைதானத்தில் ஒருவர் பலி

ஒன்ராறியோ கோல்ஃப் மைதானத்தில் ஒருவர் பலி

ஹால்டன் ஹில்சைச் சேர்ந்த வில்லியம் எலியட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

👤 Sivasankaran30 Aug 2021 3:31 PM GMT
ஒன்ராறியோ கோல்ஃப் மைதானத்தில் ஒருவர் பலி
Share Post

சனிக்கிழமை மாலை அப்பகுதியில் வீசிய கடும் புயலின் போது எரின், ஒன்ராறியோ கோல்ஃப் மைதானத்தில் காயமடைந்த 59 வயது முதியவர் இறந்தார்.

காலரின் கோல்ஃப் கிளப்பில் (Calerin Golf Club) மாலை 6 மணிக்குப் பிறகு காயமடைந்தவர் தொடர்பில் அவசர குழுவினர் பதிலளித்தனர்.

கடுமையான வானிலை காரணமாக வாகன நிறுத்துமிடத்தில் ஆளில்லாத கார் மீது மரம் மற்றும் ஹைட்ரோ லைன் விழுந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

"ஒரு சிறிய தீயை அணைக்க உரிமையாளர் காரை அணுகியபோது, அவர் திடீரென சரிந்தார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹால்டன் ஹில்சைச் சேர்ந்த வில்லியம் எலியட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எலியட்டின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உடற்கூறாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.