Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஆறு மாதக் குழந்தையைக் கொன்ற கனேடியர் கைது

ஆறு மாதக் குழந்தையைக் கொன்ற கனேடியர் கைது

அந்த சண்டையின்போது பிரென்னாவின் குழந்தை தனயாவைக் (Tanayah) தரீக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்.

👤 Sivasankaran5 Sep 2021 2:15 PM GMT
ஆறு மாதக் குழந்தையைக் கொன்ற கனேடியர் கைது
Share Post

ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தகராற்றின்போது ஆறு மாதக் குழந்தையைக் கொன்ற கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டோனி நககோடா முதல் தேசத்தில் (Stoney Nakoda First Nation) வாழும் தரீக் லீமான் கூட்டெனய் (Tyriq Lyman Kootenay) (21) என்பவருக்கும் பிரென்னா ஹந்தர் (Brenna Hunter) என்ற பெண்ணுக்கும் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையின்போது பிரென்னாவின் குழந்தை தனயாவைக் (Tanayah) தரீக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்.

காவல்துறையினர் தரீக்கைக் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாவர்.