Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

👤 Sivasankaran8 Sep 2021 3:20 PM GMT
மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Share Post

மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோவில் (Acapulco) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெக்ஸிகோ நகரத்திற்கு தெற்கே 240 கிலோமீட்டர் (150 மைல்) தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8:47 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் மெக்சிகோ நகரம் வரை கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியதாக நில அதிர்வு நிபுணர்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் அங்கு மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.