Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ரஷ்யாவில் எரிவாயு வெடித்து இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

ரஷ்யாவில் எரிவாயு வெடித்து இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

கட்டடத்தின் மையப் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பால் அது இடிந்து விழுந்தது

👤 Sivasankaran12 Sep 2021 9:13 AM GMT
ரஷ்யாவில் எரிவாயு வெடித்து இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது
Share Post

தலைநகர் மாஸ்கோவிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள சாலிடார்னோஸ்ட் (Solidarnost) என்ற ஊரில் ரஷ்யாவில் எரிவாயு வெடித்து இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

"இந்த விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்தனர்" என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கட்டடத்தின் மையப் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பால் அது இடிந்து விழுந்ததாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவின் பிராந்தியக் கிளை கூறியது.

எரிவாயுச் சேவைப் பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற அடிப்படையில் குற்ற வழக்கைத் தொடங்கியுள்ளதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.