Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » பைசர் நிறுவனத்தின் ஊக்குவிப்பான் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி

பைசர் நிறுவனத்தின் ஊக்குவிப்பான் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி

மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் ஊக்குவிப்பான் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

👤 Sivasankaran24 Sep 2021 4:41 PM GMT
பைசர் நிறுவனத்தின் ஊக்குவிப்பான் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி
Share Post

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம், அந்நாட்டில் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் 3-வது ஊக்குவிப்பான் (பூஸ்டர்) தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம் மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் ஊக்குவிப்பான் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில், கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களும் ஊக்குவிப்பான் தடுப்புசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசியின் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு குறைந்தபட்சம் 6 மாதம் ஆன பிறகு 3-வது ஊக்குவிப்பான் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.