கீலே மற்றும் வில்சன் அருகே டிடிசி பேருந்தில் சிறுவனுக்கு கத்திக்குத்து
தகவல் தெரிந்தவர்கள் நேரடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சனிக்கிழமை பிற்பகல் டிடிசி பேருந்தில் பல முறை கத்தியால் குத்தப்பட்டுக் காயாமடைந்த ஒரு பதின்ம வயது இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மதியம் 2:15 மணியளவில் ஒரு இளைஞர் பேருந்தில் தாக்கப்பட்டு குத்தப்பட்டார் என்ற புகாரின் ஒரு பேரில், கீலே தெரு மற்றும் வில்சன் அவென்யூ பகுதிக்கு அழைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் அந்த இளைஞரைச் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றதாக டொராண்டோ துணை மருத்துவ சேவைகள் தெரிவித்தன.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் சரியான வயது தற்போது வெளியிடப்படவில்லை. பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தகவல் தெரிந்தவர்கள் நேரடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.