Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » யாழ்ப்பாணத்திற்கு காரைக்காலில் இருந்து கப்பல் சேவை

யாழ்ப்பாணத்திற்கு காரைக்காலில் இருந்து கப்பல் சேவை

இது திடீரென நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடங்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

👤 Sivasankaran6 Oct 2021 2:57 PM GMT
யாழ்ப்பாணத்திற்கு காரைக்காலில் இருந்து கப்பல் சேவை
Share Post

காரைக்காலில் இருந்து சிறிலங்காவுக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று இந்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கருத்து தெரிவித்த தமிழிசை,

"புதுவையிலும் சுற்றுலாவை வளர்க்க கடல் பயணம் மூலம் காரைக்காலுக்குச் செல்ல முன்னோட்டமாக அமையும். காரைக்காலில் இருந்து சிறிலங்காவின் யாழ்ப்பாணத்துக்கு ஏற்கெனவே கப்பல் போக்குவரத்து இருந்தது.

இது திடீரென நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடங்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதுகுறித்து சிறிலங்கா அமைச்சர்கள், தூதர்கள் பேசியுள்ளனர்.

வெளியுறவுத்துறையில் சில அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது. அதன்பின் சிறிலங்காவுக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கும்" என்று குறிப்பிட்டார்.