செல்பி எடுக்கத் தடை - இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் அறிவிப்பு
இரண்டு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றியே உரையாட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
👤 Sivasankaran8 Oct 2021 3:15 PM GMT

மஹியங்கனை - தம்பானை கிராமத்துக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆதிவாசிகளுடன் இணைந்து, செல்பி எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் வன்னிய எத்தோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிராமத்துக்கு தற்போது, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறு வருபவர்கள் கட்டாயமாக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
தம்பானை கிராமத்துக்கு வருகை தருபவர்கள், எந்தவொரு ஆதிவாசிகளுடனும் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றியே உரையாட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire