பாகிஸ்தானின் அணுசக்தி விஞ்ஞானி ஏ.க்யூ.கான் மறைவு
நுரையீரல் செயலிழப்பால் இன்று காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
👤 Sivasankaran10 Oct 2021 12:35 PM GMT

பாகிஸ்தானின் அணுசக்தி விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85.
நேற்றிரவு உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், நுரையீரல் செயலிழப்பால் இன்று காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire